சிறுகதைப் போட்டி – 37 : சிறந்த பாடல் எது..? – வெ.கண்ணன்

சோழ மாமன்னன் கரிகாற் பெருவளத்தான் காவிரிபூம்பட்டினத்தில் தன் அரியணையில் அமர்ந்திருந்தான். அப்போது அவைப்புலவரான இரும்பிடர்தலையார்,

“வளவா, உன்னை காண செந்தமிழ் புலவர்கள் பலர் வந்துள்ளனர்”

“அவர்கள் என்னை சந்திக்க அனுமதி வேண்டுமா என்ன..? புலவர்களும் மக்களும் என்னை சந்திக்க எக்கனமும்  அனுமதி தேவையில்லை என்றான் கரிகாலன்”

“யாரங்கே..? அழைத்து வாருங்கள் புலவர்களை என்று உத்தரவிட்டான் கரிகாலன்”

புலவர்கள் அனைவரும் அரச மரியாதையுடன் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை கண்ட கரிகாலன் “வருக,வருக புலவர் பெருமான்களே வருக. என் அரசவைக்கு வந்து எம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்தியமைக்கு நன்றி” என்றான் வளவன்.

புலவர்கள் அனைவருக்கும் ஆசனத்தில் அமர்ந்தனர்.

அவர்களை வரவேற்ற இரும்பிடர் தலையார்”புலவர்களே வந்த நோக்கம் என்ன..? அதுவும் உங்களின் நண்பணான எனக்கே தெரிவிக்கமால் வந்திவிட்டிர்கள் என்ன ஏதேனும் முக்கிய நிகழ்வா..

“இல்லை இரும்படர் தலையாரே”

“மன்னரையும் என்னையும் சந்திக்க தான்  வந்தீர்களோ..?” என்றார் இரும்பிடர் தலையார்

ஆமாம் புலவரே “அப்படியே நாட்டின் நிலைப்பற்றி மன்னரிடம் தெரிவித்து செல்லாம் என்ற எண்ணத்துடனும் வந்துள்ளோம்” என்றார் மற்றொரு புலவர்

அப்போது கரிகாலன் “மக்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா..? புலவர்களே

இல்லை மன்னா,”உம் தந்தையின் மறைவுக்குப் பின் மன்னரில்லாமல் ஆளப்பட்ட இச் சோழ நாடு உன்னால் மீண்டும் வளம் பெறத் தொடங்கியது மற்றும்” என்றார் ஒரு புலவர்

மற்றோருவரோ “ தமிழகத்தை தாக்க வந்த வடவரை உன் தந்தை சேர, பாண்டியருடன் சேர்ந்து தாக்கி புற முதுகிட்டு ஒடச் செய்த செயலுடன் உன் வெண்ணிப் போர் வெற்றி ஒப்பதக்கது என்றார்’’

அனால் கரிகாலன் இப்புலவர்களின் கூற்றினை கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்

இதனை கண்ட இரும்படர் தலையார் “ வளவா, என்ன சிந்தனை..?’’

வெண்ணிப்போரில் நீ பெற்ற மகத்தான வெற்றிப்பற்றிய சிந்தனையா..?

“இல்லை மாமா”

காவிரி பூம்பட்டிணத்தில் நடை பெரும் கடல் வாணிபத்தினை பற்றிய சிந்தனையா..?

“அதுவும் இல்லை மாமா”

காவிரி நீரை ஆணைக்கட்டி நாட்டினை வளமை செய்து வருகின்றாயே அச்சிந்தனையா..?

“இல்லை மாமா”

கரிகாலன் ஏனோ மனவாட்டத்திலிருந்தான் என்பதினை இரும்பிடர் தலையார் அறிந்தார்

வளவா “ இப்புலவர்களுக்கு ஏதேனும் போட்டி வைக்கின்றாயா..?”

ஏன் மாமா..? என்றான் கரிகாலன்

“நல்ல தமிழ் பாட்டு கேட்டு நீண்ட நாளாயிற்றே..?”

ஆமாம் மாமா…

புலவர்களே நம்மன்னர் “ கரிகாற் பெருவள்தானை சிறப்பித்து இருவரும் பாடல் பாடுங்கள் சிறந்த பாடலுக்கு பரிசல் உண்டு என்றார் இரும்பிடர் தலையார்”

மாமா, “இருவருக்கும் பரிசில் உண்டு சிறந்த பாடலுக்கு சிறப்பு பரிசு” என்றான் வளவன்

புலவர்கள் மூவரும் போட்டிக்கு ஆயத்தமானார்கள்

முதல் புலவர் பின்வரும் கருத்தமைந்த பாடலை பாடுகின்றார் “ கரிகால உன் கால் நீ வெண்ணி பரந்தலையில் ஆயிரக்கணக்கான யானைகளை மிதித்து கொன்றாயே அதனால் கருதியதா.. இல்லை உன்னுடன் போருக்கு வர அஞ்சி வேற்றரசர்கள் உன் காலில் விழுந்ததால் கருகியதா..? என்ற பாடலை பாடினார்

“அருமையான பாடல் புலவரே , சிறந்த கற்பனை வளம்” என்றார் இரும்பிடர் தலையார்

மாமா தங்கள் தமிழ் தாகம் தீர்ந்ததா..?

எனக்கு இன்னும் அதிகமாகியுள்ளது

மற்றோரு பாடலை கேட்க ஆர்வமுடன் உள்ளேன் என்றான்” வளவன்

மற்றொரு பாடலை பாட விழைகின்றார்

அதன் கருத்தாவது “நீர் நிறைந்த கடலின் நடுவே, காற்றை கிழித்து கொண்டு கடலில் பயணிக்கும் கப்பல்களை கொண்டு உலகெங்கும் உள்ள கடல்களை கடந்து வாணிபம் செய்து கடலை ஆண்ட சோழர் வழி வந்தவனே.. வெண்ணி பரந்தலையில் நீ உன் வலிமையினால் வென்றாய் ஆயீனும் விழுப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர் விட்ட சேரலாதனும் உலக வாழ்வை நீக்கி வெற்றி பெற்றான். அவன் போரில் தோற்றாலும் வெற்றி பெற்றது ஆவனே” (புறம் 66) ( வெண்ணி குயத்தியார் )என்ற பாடலை பாடினார்.

இதை கேட்டு வெகுண்டெழுந்தார் இருப்பிடர் தலையார்

“புலவரே, பித்தா பிடித்துவிட்டது உமக்கு. அவை நாகரிகம் இல்லையா.. உமக்கு..? என்றார்”

“மாமா அவர் பாடியதில் என்ன பிழையுள்ளது..?”

வளவா உனக்கு பாடலின் பொருள் விளங்கவில்லையா..?

மாமா தங்களின் மாணவன் நான் எனக்கு எப்படி புரியாமல் போகும்..?

கரிகாலன் புலவரை நோக்கி தமிழ் சான்றோனே “ இப்பாடலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அருமையான பாடல் தான் ஆனால் உண்மையான கருத்தமைந்த பாடல்”

நன்றி மன்னா.. இப்பாடலால் தாங்கள் கோபம் கொள்ளவில்லையா..?

இல்லை புலவரே “ எனக்கும் நீண்ட நாட்களாக ஒரு மனக்குழப்பம் அக்குழப்பம் இன்று நீங்கியது” என்றான் வளவன்

என்ன குழப்பம் வளவா..?

யாரேனும் வெண்ணி பரந்தலை போரினை பற்றி பேசக்கண்டால், என்னை விடச்சிறந்த வீரனான சேரலாதன் விழுப்புண் நாணி இறக்க நான் தான் காரணம் என்ற குழப்பம் தான் மாமா..என்றான் வளவன்.

ஒ.. அதான் நாங்கள் உரையாடி கொண்டிருக்கும் பொழுது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாயா..?

ஆமாம் மாமா “ புலவரே மன்னர் தீச்செயல் செய்யும் பொழுது இடித்துறைப்பதும், நற் செயல் செய்யும் போது பாராட்டுவதும் தமிழ் புலவரினின் கடமையன்ரோ..?

ஆமாம் மன்னா “ ஆனால் இப்பாடல் தங்களை இழிவு படுத்தி பார்க்க இயேற்றபட்டது அன்று” என்றார் புலவர்

இரும்பிடர் தலையாரோ “புலவரே நீர் என்ன கூறினாலும் எம்மனம் ஏற்க்க வில்லை  சேரன் வடக்கிருக்க முயன்ற போது அவனை தடுத்தவன் கரிகாலன் தான்.., போருக்கு அழைத்தது சேரனும் அவன் கூட்டுப்படையும் தான்” என்றார்

தோழரே “இப்பாடலால் கரிகாலனின் மனக்குழப்பம் நீங்கியதாய் அவர் கூறியதை தாங்கள் கேட்கவில்லையா..? என்றார் புலவர்

ஆமாம் “தோழரே அப்புலவர் கூற்றிலும் உண்மை உள்ளது” என்றார் முதல் புலவர்

இரும்பிடர்தலையார் கரிகாலனை நோக்கி வளவா “ எப்பாடல் சிறந்த பாடல் என்று நீயே தேர்ந்தெடு..”

மாமா “ என்னை போற்றி பாடிய முதல் புலவரின் பாடலை விட என்னை தூற்றி பாடிய இரண்டாம் புலவரின் பாடலே சிறந்தது”

வளவா “ என்ன விளையாடுகின்றாயா..?

“இல்லை மாமா என் மனக்குழப்பம் நீக்கிய இரண்டாம் பாடேலே சிறந்த பாடல்”

யாரங்கே..? மூன்றாயிரம் பொன் எடுத்து வா…

உத்தரவு மன்னா..

மாமா ஒரு சந்தேகம்

என்ன வளவா…?

“அப்புலவர் பாடியதில் தவறில்லை என்று உங்களுக்கு தெரிந்தும் எனக்காக தானே அவரிடம் வாதிட்டீர்கள்..?

ஆமாம் வளவா.. தங்களின் கருத்தினை யாருக்கும் அஞ்சாமல் கூறுவது தமிழ் புலவரினின் கடமையன்றோ..?

“மாமா இரண்டாம் பாடலுக்கு சிறப்பு பரிசில் அளிப்பதில் தங்களுக்கு ஏதேனும் வருத்தமா..?

“இல்லை வளவா, அப்பாடலும் சிறந்த பாடல் தான்..”

“அப்படியா இந்த பரிசிலை தாங்களே இப்புலவர்களுக்கு அளித்துவிடுங்கள் மாமா”

பரிசிலாக இரண்டு புலவருக்கும் தலா ஆயிரம் பொன்னும், சிறந்த பாடலான இரண்டாம் பாடலை பாடிய புலவருக்கு சிறப்பு  பரிசாய் மேலும் ஆயிரம் பொன்னும் இரும்பிடர் தலையார் அறிந்தார்

இருபுலர்களும் கரிகாலனையும் இரும்பிடர் தலையாரையும் ஆரத்தழுவி விடைப்பெற்றனர்.