மோமோவைத் தொடர்ந்துவரும் தொழில்நுட்பத் தொல்லைகள் #TechnologyAlert

தொழில்நுட்பப் பிரச்னை

தொழில்நுட்பத்தின் தேவையை உணர்ந்து அதை நமது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவதை விடுத்து வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டும் எப்பொழுது பயன்படுத்த ஆரம்பித்தோமோ, அதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். அடுத்து வரும் காலங்களில் மனிதவள தரவுகளே பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் முதலீடாக இருக்கப் போகிறது.

தொழில்நுட்பப் பிரச்னை
தொழில்நுட்பப் பிரச்னை
Yours Shamefully : பாலியல் வறட்சி, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…

பன்னாட்டு நிறுவனங்களின் தகவல் திருடும் தொழில்நுட்பம்:

பன்னாட்டு நிறுவனங்கள் தனிநபர் தகவல்களை எப்படி திருட முடியும். அதற்குத்தான் இந்த கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சி. இந்த அளவிற்கு ஒரு புரட்சியை கண்ட ஒரு தலைமுறை நாமாகத்தான் இருப்போம். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு உபயோகம் இல்லை. இன்று ஒவ்வொருவற்கும் ஒரு கைபேசி என்ற அளவில் வந்துவிட்டது. ஆனால், எதற்காக இந்த முயற்சி??? இது மக்கள் அனைவரின் தகவல்களையும் திரட்ட கொண்டுவரப்பட்ட திட்டம்.

உண்மையில் ஆண்ட்ராய்டு என்பது ஒரு பெண் உருவமைப்பு கொண்ட தானியங்கு இயந்திரத்தின் பெயர். 10 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. பிறகு, அதன் இயங்கு தளத்தை கைபேசியில் பயன்படுத்தி தற்போதுள்ள சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன. இதை google நிறுவனம் கைப்பற்றி தற்போது நடத்தி வருகிறது. இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிளில் பதிவு செய்யப்பட்ட கணக்கு தேவை. மேலும், நம் கைபேசியை வலைத்தளத்துடன் இணைக்க அனைவருக்கும் ip address எனப்படும் வலைதள குறியீடு நம் பயன்படுத்தும் தொலைதொடர்பு நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த குறியீடு தான் நமது வீட்டு கதவு. இதை பயன்படுத்தி தான் நமது சாதனத்தில் நுழைய முடியும்.

நமது தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன?

அதற்கு உருவாக்கப்பட்டது தான் இந்த சமூக வலைத்தளங்கள். நாம் ஒரு வலைதளத்தை அணுகி உள்நுழைய வேண்டும் என்றால் அதற்க்கு சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும். மேலும், நாம் குறிப்பிட்ட வலைதளத்தில் நுழையும் போதே நம்முடைய வலைதள குறியீடு தானாக அந்த வலைதளத்தில் பதிவாகி விடும். இப்படி பல பேரை குறிப்பிட்ட இடத்தில் குவிக்க தான் இவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கே தெரியாமல் அவர்களின் தரவுகளை பதிவு செய்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் முகநூல் வலைதளம் தனிநபர் தகவல்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்ற சிக்கலில் மாட்டியது நினைவிருக்கலாம். மேலும், கூகிள் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் cloud storage வசதிக்காக பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. இந்திய அரசும் இதை யோசித்து வருவதாக கேள்வி.

முதலில் இதுபோன்ற தனிநபர் தரவுகள் இரகசிய ஆவணங்களை கைப்பற்றவும் பணத்திற்க்காகவும் செய்யப்பட்டது. ஆனால், இப்பொழுது நாம் சமூக வலைத்தளங்களில் பெரும் நேரத்தை செலவிடுவதால் சில பேர் தனிப்பட்ட முறையில் விளையாட்டாக கூட தரவுகளை திருடுகின்றனர். இந்த மாதிரி ஆரம்பிக்கப்பட்டது தான் ப்ளூ வேல். சில பேர் வலைதள விளையாட்டுகளுக்கு அடிமையாக இருப்பார்கள். அவர்களையும் குழந்தைகளையும், இளம் வயதினரையும் குறி வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த தற்கொலை விளையாட்டுகள்.

 வாட்சப் வழியே நுழையும் மோமோ :

தற்போது பிரபலமாகி வரும் மோமோ என்ற விளையாட்டு நேரடியாக whats app இல் பரவி வருகிறது. தெரியாத எண்ணில் இருந்து வரும் செய்தியை உள்நுழைந்து படித்தாலே நம்முடைய தரவுகள் அனைத்தும் திருடப்பட்டுவிடும். சில பேர் நினைக்கலாம் இது எவ்வாறு சாத்தியம் என்று. ஆனால், முடியும். குறிப்பிட்ட செய்தி அல்லது படத்தினை மென்பொருள் கொண்டு குறியீடுகளாக மாற்றி பதிவேற்றம் செய்து பகிர்வர். பொதுவாக whats app ல் வரும் bit. மற்றும் go. என்று தொடங்கும்  இணைப்புகள் மேல சொன்ன குறியீடுகளே. இந்த இணைப்பை பயன்படுத்தியவர்கள் அனைவரின்  ip address, network provider, range  எல்லா தகவல்களும் குறிப்பிட்ட வலைத்தளத்தில் பதியப்படும். இதனை கொண்டு நமது அனுமதி இல்லாமல் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய முடியும்.  நமது கருவியை கட்டுப்படுத்த முடியும். இந்த மாதிரி செய்துதான் புதுக்கோட்டையில்  பெண்களின் கைபேசியை ஹேக்கிங் செய்த வழக்கில் ஒருவன் சிக்கி உள்ளான்.

இது போன்ற பாதிப்புகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?

எனவே, தெரியாத எண்ணில் இருந்து வரும் செய்திகளை தவிர்ப்பது நல்லது. மேலும், தேவை இல்லாத செயலிகளை தவிர்க்க வேண்டும். நமது  தனிப்பட்ட செய்தியையோ, புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில் பதிவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் தங்களின் கைபேசிகளை மற்றவர்களிடம் கொடுக்க கூடாது. play store, play protect இல் சென்று நமது செயலிகளை scan செய்து கொள்ள வேண்டும். Privacy settings மற்றும் auto download ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் வழக்கத்திற்குமாறான  நடவடிக்கைகள் இருந்தால் பொறுமையாக பேசி காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இளம்வயதினர் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களை நமது முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி நாடு வளம்பெற செய்வோமாக…!

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

– கோபால்