ஓர் எச்சரிக்கை அலர்ட் : மோமோவிலிருந்து தப்பிப்பது எப்படி? #MOMO #மோமோ

டந்த ஆண்டு 2017-ல் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டது ப்ளூ வேல். அந்த விளையாட்டைத் தொடர்ந்து, அதே மாதிரியான வகையில் புதுப்புது சவால்களுடன் விளையாடுபவர்களை மனோரீதியாகப் பாதித்து, செல்போனை ஹேக் செய்து தகவல்களை திருடி, ப்ளாக் மெயில் செய்யும் விளையாட்டாக அறிமுகமாகியிருக்கிறது மோமோ (MOMO) எனப்படும் எனப்படும் வாட்சப் சவால்.  தற்கொலைக்குத்தூண்டி பல உயிர்களை பலிவாங்கக் களமிறங்கியிருக்கிறது இந்தப் புது விளையாட்டு.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….
MOMO
மோமோ

மோமோ என்பது என்ன?

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், சில பல வாட்ஸப் க்ரூப்கள் போன்றவைகளைப் பயன்படுத்தி பயனர்களின் மொபைல் எண்களுக்கு வாட்சப் மூலம் மெசெஜ் அனுப்பி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது மோமோ. தொடக்கத்தில் சின்னச் சின்ன சவால்களைக் கொடுத்து செய்யச் சொல்லும். பிறகு, அன்பாக செல்லமாகப் பேசி உங்களின் ப்ரத்யேக அந்தரங்க்க விசயங்களை தெரிந்து கொள்ளும். அது கொடுக்கும் சவால்களைச் செய்ய சொல்லும். செய்ய மறுத்தால் பயமுறுத்தும் வகையில் வக்கிரமாக புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிரும்.  மொபைலில் திருட்டுத்தனமாக ஆப்களை இன்ஸ்டால் செய்து மொபைலை ஹேக் செய்து உங்கள் தகவல்கள், செல்போன் உரையாடல்கள் பொன்றவைகளை திருடிவிடும். அந்தரங்க விசயங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு விடுவேன், எல்லோருக்கும் தெரியப்படுத்திவிடுவேன் என்றெல்லாம் பயமுறுத்தும். ஏற்கெனவே இதை விளையாடுபவர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆகவே அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் காரியங்களையெல்லாம் செய்து வாட்ஸப்பில் வீடியோவாக எடுத்து பகிரச் சொல்லும்.

மெக்ஸிகோ, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இந்த மோமோவால் (MOMO)பாதிப்படைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அர்ஜெண்டினாவில் 12 வயது பெண் குழந்தை இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்து கொண்டாள் என்னும் செய்தி வெளியான பின்னரே எல்லோரும் கொஞ்சம் அலெர்டாகியிருக்கிறோம்.

தாய்ப்பறவை மோமோ பொம்மை_momo bommai

மோமோ விளையாட்டில் காட்டப்படும் அந்தக் கர்ணகடூரமான பேய் பொம்மையைப் பற்றி சில குறிப்புகள்:

இந்த விளையாட்டுடன் தொடர்படுத்திக் காட்டப்படும் பொம்மை ஜப்பானிய ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் கம்பெனியான லிங்க் பேக்டரியால் (Link Factory) உருவாக்கப்பட்ட சிற்பம்.  மோமோ எனக் காட்டப்படும் இந்தப் பொம்மையின் உண்மையான பெயர் தாய்ப்பறவை (Mother Bird). டோக்கியோவில் இருக்கும் வென்னிலா ஆர்ட் கேலரியில் (Tokyo’s horror art Vanilla Gallery) இந்த பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மையை வடிவமைத்தவர் ஜப்பானிய பொம்மை வடிவமைப்பாளர் மிடோரி ஹயாஷி (Midori Hayashi). மிடோரி ஹாயாஷி இதுபோல பயமுறுத்தும் பேய் பொம்மைகள் செய்வதில் வல்லவர்.

இந்தப் பொம்மையின் வடிவமைப்பாளருக்கோ, இதைக் கண்காட்சியில் வைத்திருக்கும் ஜப்பானிய கலைக்கூடத்திற்கோ இந்த விளையாட்டின் மூலம் உயிரைப் பறிக்கும் கும்பலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மோமோ (MOMO):

மோமோ விளையாட்டின் தாக்கங்கள் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மீம் க்ரியேட்டர்களின் கைவண்ணத்தில் கலாய் வாங்கி கலகல வாகிக்கொண்டிருக்கிறது மோமோ.

உண்மையில் மோமோ (MOMO) வந்தால் நம்மால் கலாய்க்க முடியுமா?

வாடி வா , பாத்துக்கறேன் என்று எத்தனைத் துணிச்சலாக இறங்கினாலும் மனோரீதியாக பயமுறுத்தும் சத்தங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என காட்டி நம்மை அது போக்கிற்கு பழக்கப்படுத்தும். அதன் பிறகு நமது மொபைல்களில் கிரிப்டோகிராபி செய்யப்பட்ட வைரஸ்களையும் மால்வேர்களையும் புகைப்படங்கள், வீடியோக்கள் வாயிலாக அல்லது நேரடியாக இன்ஸ்டால் செய்யும். இந்த மால்வேர்களும் வைரஸ்களும் மொபைல் போனில் நீங்கள் செய்யும் நடவடிக்கைகளை கீ-லாக்கின் (Key – Logging), ரிமோட் செண்டிங்க் போன்ற ஹேக்கிங்க் முறைகள் மூலம் கவனித்து உங்கள் தகவல்கள், பேஸ்புக் பாஸ்வேர்ட், காண்டாக்ட் லிஸ்டில் உள்ள மொபைல் எண்கள், உங்களது போன் கால்கள் போன்றவைகளை அபேஷ் செய்யும்.

மிரட்டி, பயமுறுத்தி அது சொல்லும் சவால்களை எல்லாம் செய்ய சொல்லும், செய்ய மறுத்தால் நம் ரகசிய தகவல்களை பேஸ்புக்கில் பகிரப்போவதாகவும் நம் நண்பர்களுக்கு சொல்லி விடுவதாகவும் மிரட்டும். மனோவியல் ரீதியாகப் பாதிக்கும் வகையில் பயமுறுத்தும் சத்தங்களையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் நம்மைப் பார்க்க வைத்து மனரீதியாகப் பாதித்து நம்மைத் தற்கொலைக்குத் தூண்டும்.

குழந்தைகளையும் டீன் ஏஜ் பருவத்தினரையும் டார்கெட் செய்யும் இந்த மோமோவால், மனரீதியாக வலிமையாக இருக்கும் நபர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

அலெர்ட் டிப்ஸ் (MOMO) :

மோமோ, ப்ளூவேல் இன்னும் இதுபோன்ற எல்லா விளையாட்டுக்களுக்கும் பின்வரும் டிப்ஸ்கள் பொதுவானவை:

  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகளை கண்ணும் கருத்துமாகக் காண்கானியுங்கள். கார்ட்டூன்களின் தாக்கத்தில் கட்டுண்டிருக்கும் குழந்தைகள் மனோரீதியாக எளிதில் இதன் பொறியில் சிக்க வாய்ப்புகள் உள்ளது.
  • நான் தைரியசாலியாக்கும்… மோமோ வந்தால் கலாய்ய்த்து விடுவேன் என்பவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அது தரும் வீடியோக்கள், இமேஜ்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்வது, அது சொல்லும் இணையதளங்களுக்குச் போவது போன்ற பொறிகளைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை ஹேக் செய்துவிடும்.
  • தெரியாத நபர்களின் எண்களிலிருந்து சம்பந்தமில்லாத தகவல்கள் வந்தால் எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.
  • பேஸ்புக் , வாட்ஸப் க்ரூப்களின் உதவியாலே தான் இந்த மோமோ பரவுவதாக பரவலாக செய்தி வந்திருக்கிறது, தேவையற்ற நபர்களின் மெசேஜ்களை புறக்கணியுங்கள்.

#MOMO #மோமோ

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

– விஜயன் துரைராஜ்