‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

வணக்கம்…

சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பரிசுகள்

 • முதல் பரிசு  – ரூ. 5,000

 • இரண்டாம் பரிசு  – ரூ. 4,000

 • மூன்றாம் பரிசு  – ரூ.3,000

 • ஆறுதல் பரிசு  – ரூ.1,000  (மூன்று நபர்களுக்கு) 

விதிமுறைகள்

 • போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளோகுறுநாவல்களோசங்க காலப் பாடல்களின் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 • சிறுகதை / குறுநாவலின் இறுதியில் அடிக்குறிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட சங்கப் பாடல் மற்றும் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். 

 • அனுப்பி வைக்கப்படும் கதையோடு எழுத்தாளரின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.  

 • தமிழில் அனுப்பப்படும் சிறுகதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும்.

 • கதை நிகழ்காலத்திலோ அல்லது சங்க காலத்திலோ நடக்கும்படியாக எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அறிவியல் புதினமாகக் கூட எழுதலாம். 

 • கதைகளின் பக்கங்கள் வார்த்தை எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

 • இப்போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள்  எழுத்தாளரின் சொந்த முயற்சியாக இருத்தல் வேண்டும்.

 • இதுவரையில் ஊடகங்களில் வெளிவராத படைப்பு என்ற உத்தரவாதம் போட்டியாளரால் தரப்படல் வேண்டும். இதற்கு முன்பு வேறு நூல்களிலோநாளேடுகளிலோவலைப்பூக்களிலோசமூக வளைதளங்களிலோ பகிரப்பட்ட படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

 • கணிணித் தமிழ் எழுத்துருவில் (unicode font) கதைகள் அனுப்பப்பட வேண்டும்.

 • படைப்புகளை tamilvetrivel@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்குமின்னஞ்சல் ‘பொருள்’ (Subject) – ‘வென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி2018’என்று குறித்து 10.07.2018 க்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.

 • அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள் www.writervetrivel.com ல் வெளியிடப்படும்.

 • வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் பெயர்கள் 09.08.2018 அன்று அறிவிக்கப்படும்.

 • தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகளைப் புத்தகமாக வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 • ஒருவர் எத்தனைக் கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம், எந்தவித கட்டுபாடுகளும் இல்லை.
 • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
உதாரணக் கதைகளுக்கு :

http://writervetrivel.com/vetri-short-story-1/

சங்க கால இலக்கியங்களை அனைவரும் எளிமையாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பங்குகொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
சி.வெற்றிவேல்,
சாலைக்குறிச்சி…